#2-Love Poem by Ragu
கவிதை உறைந்தது அவள் வருகையை எண்ணி
❤️
உன்னை இமைக்காமல் பார்த்த என் கண்கள் உன்னைத்திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டி நித்தமும் என்னைக் கெஞ்சினால்
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்.!
நீ மாமா என்று கூப்பிட்டு என் மாமாங்கத்தையே அதிர வைத்த உன் குரலை என் செவி திரும்பத் திரும்பக் கேட்டால்
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்.!
என் இதயத்துடிப்பு சத்தத்தைக் கேட்க என் தேவதை எங்கே என்று என் இதயம் கேட்டால்
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்.!
உன் சுவாசத்தை அறிந்த என் மூக்கறிவு மீண்டும் அதனை முப்பொழுதும் என் அருகிலேயே வை என்று கேட்டால்
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்.!
உன் மயிர் கூசி மெய் சிலிர்த்த என் தேகம் மீண்டும் அதனைத் திரும்பத் திரும்பக் கேட்டால்
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்.!
என் தலைமயிரைக் கோதிய உன் பிஞ்சு விரல்களைக் கேட்டு என் முடிகள் கெஞ்சி நிற்கையில்
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்.!
உன் தேகத்தை அணைத்த என் கைகள் மீண்டும் அதனை திரும்பத் திரும்பக் கட்டி அணைக்கக் கேட்டால்
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்.!
உன் உதட்டைச் சுவைத்த என் உதடு,அச்செவ்விதழை திரும்பத் திரும்பக் கேட்டால்
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்.!
சேயாய் பிறந்து தாயாய் உருவெடுக்கப் போகின்ற
என்காதலியைத் தாயக அழைப்பெனா
சேயாக அணைப்பெனா,
என்ற விடை புரியாமல் நிற்கையில்.,
(மாமா என்ற குரலில் இத்தன்னை இத்தனை ஆசை என்மீது வைத்துள்ள உனக்கு நான் பாயாகி, சேய் எடுத்து தாயக வேண்டும் என்று சொன்ன என் தங்கமே)
உன்னை மட்டும் நினைத்தால்.,
❤️
வானத்தைக் காகிதமாக்கிக் கொண்டு எழுதினாலும் என் கவிதை கொள்ளாது என் கண்மணியே.!
- இரகு பிரசாத் ✍️

அழகிய வரிகள் 🥰🥰🥰
ReplyDelete😍😍😍😍
ReplyDelete❤️
ReplyDeleteஎன்ன என்ன சொல்றான் பாருங்க 😏😏
ReplyDelete💛
ReplyDeleteSssh
ReplyDeleteSuper bro❤
ReplyDeleteSuper bro
ReplyDeleteTharama iruku machi....
ReplyDelete